நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்ற கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி கரை ஒன்பதாம் படி பகுதியில் கோபி(24) என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ள நிலையில் தற்போது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோபி ஓடப்பள்ளி பகுதியில் கட்டிட வேலைக்கு சென்ற போது அப்பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை குறி கடந்த 18ஆம் தேதி கோபி அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கட்டிட தொழிலாளியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியை காவிரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபியை கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவரிடம் விசாரித்ததில் சிறுமியை திருமணம் செய்துகொண்டு பாலியல் தொல்லை குடுத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைந்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கோபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.