முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது..
தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைகிறது.. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்..
செப்டம்பர் 1-ம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கக்கூடிய பள்ளிகள் அனைத்தும் திறக்கக்கூடிய நிலையில், இது தொடர்பாகவும், தியேட்டர்கள் திறப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.. தொடர்ந்து ஆலோசனை நடைபெறுகிறது..