Categories
தேசிய செய்திகள்

பிரதமருடனான ஆலோசனைக் கூட்டம்…. வெளியான விவகாரம்…. கெஜ்ரிவால் அலுவலகம் வருத்தம்….!!

 கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இந்த காணொளி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் பிரதமர் மோடி பேசிய காட்சிகள் நேரலையில் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் இந்த ஆலோசனையின் போது எடுத்துரைத்துள்ளார். அப்போது டெல்லி முதல்வர் இந்த விவகாரத்தை அரசியலுக்காக பயன்படுத்தி கொண்டுள்ளார் என்ற பொய்களை பரப்புவது மத்திய அரசு விமர்சனம் செய்துள்ளது.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அலுவலகம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், ” பிரதமருடனான ஆலோசனைக் கூட்டம் நேரில் செய்யக்கூடாது என மத்திய அரசிடமிருந்து வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாக எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்றும் இரகசியம் இல்லாதபோது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் இதற்கு முன்பாக பல நிகழ்வுகளில் நேரலை செய்யப்பட்டது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் ஏதேனும் சிரமப்படுத்தி இருந்தால் நாங்கள் மிகுந்த வருத்தம் கொள்கிறோம்” என்று அலுவலகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |