Categories
தேசிய செய்திகள்

தங்கையுடன் தொடர்பு…. கர்ப்பிணி மனைவியை சுட்டு கொன்ற கணவன்…. கைது செய்த காவல்துறை….!!

கர்ப்பிணி மனைவியை கணவர் தனது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநிலத்தில் நிஜாமுதீன் பகுதியில் சாய்னா என்பவர் வசித்து வந்தார். இவர் வாசீம் என்பவரை ஓராண்டிற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் சாய்னா மீது போதைப் பொருள் வழக்கு ஒன்று இருப்பதால் அவர் சிறைக்கு சென்று கடந்த 24-ஆம் தேதி ஜாமீனில் வெளி வந்துள்ளார். இவர் சிறையில் இருக்கும்போது வாசீம் சாய்னாவின் தங்கையான ரெஹானாவுடன் தொடர்பு வைத்துள்ளார்.

இந்நிலையில் சிறையிலிருந்து திரும்பி வந்த சாய்னா இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வாசீமுக்கும் சாய்னாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சாய்னா சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் தான் ரெஹானாவை சந்திக்கவில்லை என சாய்னாவிடம் வாசீம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளார். ஆனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வாசிம் தான்  வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சாய்னாவை சுட்டுக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் வாசீமை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |