கண்டெய்னர் லாரியில் இருந்து 2 3/4 லட்சம் மதிப்பிலான ஷூக்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாகிரெட்டிபாளையம் பகுதியில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டெய்னர் லாரியில் முன்னணி நிறுவனத்திலிருந்து 149 ஷூ பெட்டிகளை ஏற்றிக்கொண்டு போச்சம்பள்ளியிலிருந்து மணலிக்கு சென்றுகொண்டிருந்தார். இதனை அடுத்து தினேஷ்குமார் தூக்க கலக்கம் காரணமாக சென்னை – பெங்களுர் சாலைஓரம் கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு சிறிது நேரம் தூங்கினார்.
அதன்பின் தினேஷ்குமார் தூங்கி எழுந்து பார்க்கும்போது லாரியின் பின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 38 பெட்டிகளில் உள்ள 2 3/4 மதிப்புள்ள ஷூக்களை திருடியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தினேஷ் குமார் அவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஷூக்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.