Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சந்திப்பு முடிந்த பிறகு… அ.தி.மு.க பிரமுகருக்கு நேர்ந்த சோகம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சாலை விபத்தில் அ.தி.மு.க பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூர் மாவட்டத்தில் ஒன்றிய அ.தி.மு.க துணை செயலாளராக இருக்கின்றார். இந்நிலையில் சொக்களிங்கம் அ.தி.மு.க நிர்வாகியின் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த சந்திப்பு முடிந்தவுடன் சாலையை கடக்க முயன்ற போது கண்டெய்னர் லாரி ஒன்று சொக்கலிங்கம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சொக்கலிங்கம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சொக்கலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |