Categories
தேசிய செய்திகள்

ஓடும் கண்டெய்னர் லாரிகளில் இருந்து செல்போன்கள் கொள்ளை…!!

நெடுஞ்சாலைகளில் செல்லும் கண்டெய்னர் லாரிகளில் இருந்து திரைப்படத்தில் வருவது போல செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடும் கும்பலை ஆந்திரா போலீசார் பிடித்துள்ளனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஓடும் லாரியில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் எப்படி கொள்ளை போகின்றன, என்பதை விளக்கும் படத்தையும் அதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. பரபரப்பான தங்க நாற்கர நெடுஞ்சாலை, ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து கொல்கத்தா செல்லும் சாலை. ஊருக்கு வெளியே மாற்று வழி சாலை என்பதால் மக்கள் நடமாட்டமின்றி வாகனங்கள் மட்டுமே பறக்கும் இந்த சாலையில் கொள்ளைக்கு எப்போதும் பஞ்சமில்லை.

இப்படித்தான் ஸ்ரீ சிட்டி நகரில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்ற கண்டெய்னர் லாரியில் ஏற்றி அனுப்பப்பட்ட செல்போன்கள் கொள்ளை போயின. விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் கொலை நடந்தது எப்படி என்பதை விளக்கும் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை போலீஸ் வெளியிட்டுள்ளது. அதி வேகமாக சென்றுகொண்டிருக்கும் கண்டெய்னர் லாரிகளில் இருந்து பொருட்கள் எப்படி கொள்ளை போகின்றன என்பது குறித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு நெடுஞ்சாலைகளில் கொள்ளை எப்படி அடங்கியிருக்கிறது என்பதை விளக்கும் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டு உள்ளனர்.

கண்டெய்னர் லாரியை கார் ஒன்று பின்தொடர்ந்து செல்வதை பாருங்கள். இருசக்கர வாகனத்தில் வரும் மூன்று பேர் எப்படி கன்டெய்னரின்  பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பொருட்களை எப்படி அல்லி வருகிறார்கள் என்பதை காட்டும் உண்மையான சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளன. கொலைக்கு பயன்படுத்திய ஒரு லாரி மற்றும் கொள்ளை போன மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு ஓடும் கண்டெய்னர் லாரிகளில் இருந்து பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. எனவே கொள்ளை நடந்த விதம் குறித்தும், கொள்ளையர்கள் குறித்தும் நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |