ஆந்திர மாநிலம், சித்தூர் நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது கன்டெய்னர் லாரி மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய பலரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். கன்டெய்னர் லாரியில் பிரேக் பிடிக்காத காரணத்தினாலேயே, இந்த விபத்து ஏற்பட்டது என காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.