Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உணவு பொருளில் கலப்படம்” தனி ஒரு மனிதனாக போராட்டம்…. 1/2 நாளில் பேக்கரிக்கு சீல்…!!

மதுரையில் உணவு பொருளில் கலப்படம்  செய்த பேக்கரிக்கு டிராபிக் ராமசாமி என்பவர் தனியாக போராடி சீல் வைத்துள்ளார்.

மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியில் ஒரு பேக்கரி ஒன்று உள்ளது. இது அப்பகுதியிலேயே மிகவும் பிரபலமான பேக்கரி ஆகும். இங்கு சிறுவர் முதல் பெரியோர் வரை இனிப்பு பண்டங்களை வாங்கி செல்வர். அந்தவகையில் இங்கு தயாரிக்கப்படும் பொருட்களில் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இதனால் தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தனர். ஆனால் உணவு பாதுகாப்பு துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியிடம் பொதுமக்கள் முறையிட்டனர். இதையடுத்து நேரில் சென்ற டிராபிக் ராமசாமி கலப்படம் செய்யப்படுவதை உறுதி செய்தபின் பேக்கரி முன்பு திடீரென தர்ணா போராட்டம் நடத்தினார்.

அவரைக் கண்டு பொதுமக்களும் அவருக்கு ஆதரவாக அமர்ந்து பேக்கரிக்கு எதிராக முழக்கமிட்டனர். இதையடுத்து பெத்தனியாபுரம் காவல்துறையினர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து டிராபிக் ராமசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடந்ததை கேட்டறிந்தனர். இதையடுத்து பேக்கரியில் சோதனை மேற்கொள்ளப்பட்டு பல்வேறு ரசாயன கலப்படப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் உணவு தயாரிக்கப்படும் இடம் மற்றும் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையடுத்து  டிராபிக் ராமசாமிக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

Categories

Tech |