Categories
உலக செய்திகள்

மே…. “ஊரடங்கு தளர்வு” செப்டம்பர்…. “பள்ளி, கல்லூரி திறப்பு” பிரதமர் அறிவிப்பு…!!

மே 4 க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப் படும் என இத்தாலி பிரதமர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. சமீபத்தில் இத்தாலியில் இந்த வைரஸ் கோர தாண்டவமாடியது. ஆகையால் அந்நாட்டு பிரதமர் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 6 வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு அந்நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பும், இறப்பு விகிதமும் குறைந்ததால், அதனை மே 4 க்கு பிறகு தளர்வு செய்ய அந்நாட்டு பிரதமர் கியூ செப் கொன்டே முடிவு செய்துள்ளார்.

அதன்படி, மே 4 க்கு பிறகு கட்டுமானத்துறை, உற்பத்தித்துறை, மொத்த விற்பனையகங்கள் மட்டும் செயல்படும் என்றும், ஜூன் முதல் வாரத்தில் உணவகங்கள் செயல்படும் என்றும், செப்டம்பர் மாதத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட பின் ஒவ்வொன்றாக படிப்படியாக செயல்பட ஆரம்பிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |