Categories
இந்திய சினிமா சினிமா

“இணையத்தில் தொடர் அவதூறு”…. பணம் கொடுத்து பேச வைக்காங்க…. கடும் கோபத்தில் நடிகை பாவனா….!!!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பாவனா. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும்  நடிக்க வந்துள்ளார். நடிகை பாவனா மலையாள சினிமாவில் தற்போது  நடித்துள்ள ‘என்றாகாக்காக்கொரு பிரேமண்டார்ந்து’ என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகை பாவனா ஒரு பேட்டியில் தனக்கு எதிராக சமூக வலை தளங்களில் தொடர்ந்து அவதூறு பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாவனா கூறியதாவது, எனக்கு மலையாள சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.

என்னுடைய நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில்தான் நான் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக அவதூறுகள் தொடர்ந்து வருகிறது. சமூக வலைதளங்களின் மூலம் மிரட்டுவது மற்றும் களங்கம் ஏற்படுத்துவது சிலரின் வேலை ஆகிவிட்டது. பணம் கொடுத்து வேலைக்கு ஆட்களை அமர்த்தி தான் இந்த வேலைகளை செய்கிறார்கள். என்னுடைய கதாபாத்திரங்களின் மூலம் என்னை அறிந்தவர்கள் கூட இப்படி செய்கிறார்கள். என் முதுகுக்கு பின்னால் பேசியவர்களை நான் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை பாவனா பேசியது தற்போது மலையாளத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |