பிரேசில் ராணுவம் வயாகரா மற்றும் செயற்கை ஆணுறுப்புகளை வாங்குவதற்கு லட்சக்கணக்கான பணத்தை அரசாங்கம் செலவிடுவதாக எதிர்கசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரேசில் நாட்டின் ஆட்சி அதிபர் ஜயார் பல்சொனாரோ தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அந்நாட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எலியாஸ் வாஸ் பிரேசில் ராணுவத்துக்கு எந்த விஷயங்களுக்கெல்லாம் அரசு செலவு செய்கிறது என்று கேள்வி எழுப்பி மனு தாக்கல் செய்து இருந்தார். இதற்கு பிரேசில் ராணுவம் வயாகரா மாத்திரைகள் மற்றும் செயற்கை ஆணுறுப்புகளை வாங்குவதற்கு லட்சக்கணக்கான பணத்தை அரசாங்கம் விடுவதாக தெரிவித்திருந்தது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் எலியாஸ் வாஸ் இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். மேலும் பிரேசில் நாட்டில் பொது மக்களுக்கு உயிர் காக்கும் மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு உள்ள நிலையில் ராணுவ வீரர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வயாகராவும், செயற்கை ஆணுறுப்புகளும் வாங்குவது தேவைதானா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பிரேசில் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “உயிர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் இராணுவத்தினருக்கு சிகிச்சை அளிக்கவே வயாகரா மாத்திரையை வாங்குகின்றன. இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய தேவை இல்லை” என்று தெரிவித்துள்ளது. இருபினும் செயற்கையான ஆணுறுப்புகள் வழங்குவது குறித்து ராணுவம் எந்தவித விளக்கமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.