Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடருமா..?? EPSஇன் பதவி பறிப்பு நடவடிக்கை.. அதிமுகவினரிடையே நிலவும் பரபரப்பு சூழல்..!!

அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி பறிப்பு நிகழ்வு தொடருமோ என்ற  பரபரப்பு அதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அமைச்சர் ஒருவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம் செய்திருப்பது இதுவே முதல் முறை. அரசு கேபிள் கட்டணம் குறைப்பு  விவகாரத்தில் தனது நடவடிக்கையை விமர்சித்ததாக அமைச்சர் மணிவண்ணனை அவர் நீக்கியிருக்கிறார். இது மணிவண்ணனின் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. 

Image result for eps admk

ஜெயலலிதா ஆட்சியில் அவ்வபோது அமைச்சர்களை நீக்குவது வழக்கமான ஒன்று. ஆனால் அவரது மறைவிற்குப் பின் ஆட்சியை தக்க வைக்க போதுமான ஆதரவு  தேவை என்பதை கருத்தில் கொண்டு இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க எடப்பாடி பழனிசாமி முன்வரவில்லை. இதனை எல்லாம் கடந்து தற்போது அவர் எடுத்திருக்கும் பதவி பறிப்பு நடவடிக்கை தொடருமா என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

Related image

இதற்கு முன்பாக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் புகார் வருமான வரி ஏய்ப்பு புகார்கள் எழுந்த பொழுதும் நடவடிக்கைகள் எடுக்க தயங்கிய எடப்பாடி பழனிசாமி அவர்கள், கட்சியிலும் ஆட்சியிலும்  ஓங்கி இருப்பதன் காரணமாகவே இவ்வகையான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இனிவரும் காலங்களில் தொடருமானால் எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

Categories

Tech |