Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அப்போ இதெல்லாம் இவர் வேலைதானா… வசமாக சிக்கிய பெண்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கும்பாபிஷேக விழாவில் பெண்களின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பிச்சையம்மாள், ஆரியமாலா, விமலா, சரஸ்வதி, ராணி போன்ற 5 பெண்களிடம் இருந்து 20 பவுன் தங்க சங்கிலிகளை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

மேலும் கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் வசிக்கும் புஷ்பம் என்ற பெண்ணிடம் இருந்து 5 பவுன் நகையையும் மர்ம நபர் பறித்துச் சென்று உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாரமங்கலத்தில் உள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோரி குளம் பகுதியில் வசித்து வரும் ராஜாமணி என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த பெண் மேற்கண்ட அனைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர் பல ஊர்களில் நடைபெறும் கும்பாபிஷேக விழாக்களில் கலந்துகொண்டு இவ்வாறு தொடர் திருட்டில் ஈடுபட்டதும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 25 பவுன் தங்க நகைகளை கைப்பற்றியுள்ளனர்.

Categories

Tech |