Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. கடும் அவதியில் பொதுமக்கள்…. மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல்…..!!!!!

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மஞ்சள் எச்சரிக்கை அலர்ட் விடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது கனமழை பெய்த நிலையில், அதன் பிறகு மழை பெய்யாமல் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மும்பையில் பலத்த கன மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வருகிற 2 நாட்களுக்கு மும்பை, தானே, பால்கர் மற்றும் கொங்கன் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால்  மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, போக்குவரத்தும் முடங்கியுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் பலத்த கனமழையுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Categories

Tech |