Categories
தேசிய செய்திகள்

`”தொடர் அவமதிப்பு பேச்சு”…. ராகுல் காந்தி மீது மும்பை போலீசில் புகார்…. சுதந்திரப் போராட்ட வீரரின் பேரன் அறிவிப்பு….!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஹிங்கோலி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது, வீர் சவார்க்கர் அந்தமான் சிறையில் இருந்தார். அப்போது அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் தன்னை விடுவிக்குமாறு மன்றாடி ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதோடு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் பென்ஷன் பெற்றதோடு பிரிட்டிஷ் படைகளிலும் சேர்ந்தார்.

எனவே வீர் சவார்க்கருக்கும், பிர்ஸா முண்டாவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்று கூறினார். இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு வீர் சவார்க்கரின்‌ பேரன் ரஞ்சித் சவார்க்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு மும்பை காவல் நிலையத்தில் ராகுல் காந்தி மீது புகார் கொடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார். மேலும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அரசியலுக்காக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரர் ஆன என்னுடைய தாத்தாவை தொடர்ந்து அவமரியாதியாக பேசி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |