சீனாவில் பனிப்பொழிவு காரணமாக தட்பவெப்ப அளவு 10 டிகிரி செல்சியஸூக்கு மேல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக பனிபொழிவு பெய்து வருவதால் தட்பவெப்ப அளவு 10 டிகிரி செல்சியஸுக்கு மேல் குறைந்துள்ளது. மேலும் தொடர் பனிப்பொழிவு காரணமாக 10 முதல் 30 சென்டிமீட்டர் அளவுக்கு Changping, Yanqing ஆகிய மாவட்டங்களிலும் பனிப்பொழிவு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சாலை பகுதிகளில் படர்ந்து கிடக்கும் பனியினை சுத்தம் செய்யும் வேலையும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதேபோல் கான்சு மாகாணத்தில் குளிர் காற்றுடன் அதிகப் பனியும் வீசி வருவதால் -10 டிகிரி செல்சியஸ் வெப்பம் Lanzhou நகரில் பதிவாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.