Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து குற்ற செயல்களில்… ஈடுபட்ட 3 பேர்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலகடலாடி பகுதியில் சிவசுப்ரமணியன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இடதகராறு காரணமாக சிவசுப்ரமணியனுக்கும் முருகலிங்கம்(40), வில்வ துறை காளிமுத்து ஆகிய 3 பேருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சுப்பிரமணியனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கடலாடி காவல்துறையினர் அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் இந்த 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார். எனவே கடலாடி காவல்துறையினர் முருகலிங்கம், வில்வத்துரை, காளிமுத்து ஆகிய 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |