தலைமை ஆசிரியர் ஒருவர் சிறுமிகளை பள்ளியில் வைத்து வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக, அவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையில், ஆகஸ்ட் 2020 முதல் 7-16 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளை பள்ளியிலேயே வைத்து தலைமை ஆசிரியர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட தலைமையாசிரியர் தலைமறைவாகியுள்ளார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் அதிகாரிகளுடன் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த தலைமையாசிரியரால் பாதிக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு சிறுமி ஒருவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
40 வயதான இந்த தலைமையாசிரியர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்னர் சிறுமிகளுக்கு ஆபாச படத்தை பார்க்கும் படி கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்வது போல நம் நாட்டிலும் இதுபோன்ற சட்டங்கள் இயற்றினால் பாலியல் குற்றங்களில் ஈடுபட அஞ்சுவார்கள்.