Categories
சினிமா

தொடரும் மரணம்…. “மூன்று முடிச்சு” சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!!!

பிரபலமான ஹிந்தி சீரியல் நடிகை வைஷாலி தாக்கர். இவர் இந்தூரில் தனது தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்த நிலையில் இன்று காலை திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வைஷாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனுடன் வைஷாலி எழுதிய தற்கொலை கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் முன்னாள் காதலரின் டார்ச்சர் தாங்காமல் தான் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இவர் சமீபத்தில் கூட இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குளை அள்ளி இருந்தார். இந்நிலையில் திடீரென வைஷாலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நடிகை வைஷாலி ஹிந்தியில் ஒளிபரப்பான சசுலர் சீமார் கா என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சீரியல் பாலிமர் தொலைக்காட்சியில் மூன்று முடிச்சு என்ற பெயரில் ஒளிபரப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சமீப காலமாகவே இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |