Categories
தேசிய செய்திகள்

5 நிமிடம் தாமதமானதால்… பறிபோன 11 உயிர்கள்… திருப்பதியில் அரங்கேறிய சோகம்..!!

திருப்பதியில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

இதேபோன்று திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தினால் 11 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெற்று வரும் சில நோயாளிகள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைக்கு ஆக்சிஜன் டேங்கர்  5 நிமிடம் தாமதமாக வந்ததால் ஐசியுவில் இருந்த நோயாளிகள் அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |