மராட்டிய மாநிலத்தில் இன்றும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.
இந்தியாவில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மராட்டிய மாநிலத்தில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஓரிரு நாட்களுக்கு முன்பு இருந்து கன மழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது.
சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து மழை கொட்டி தீர்த்தது வருவதால் மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.