Categories
மாநில செய்திகள்

கனமழை, வரத்து குறைவு …… கண்ணீரை வர வைக்கும் வெங்காய விலை …!!

கன மழை மற்றும் வரத்துக் குறைவு காரணமாக மீண்டும் வெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பெரிய வெங்காயம் கர்நாடகா , ஆந்திரா மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது அங்கு மழை பெய்து வருவதால் வெங்காயத்தின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நாசிக் வெங்காயம் தற்போது 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஆந்திர வெங்காயம் 30 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோவுக்கு 20 ரூபாய் வரை உயர்ந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Image result for வெங்காயவிலை

இதேபோல் தக்காளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. நாட்டுத்தக்காளி , பெங்களூர் தக்காளி கிலோ 10 ரூபாய் அதிகரித்து 35 முதல் 45 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆந்திரா , கர்நாடகா , மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை குறைந்து நிலைமை சீரானால் மட்டுமே விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வெங்காயம் தக்காளியைப் போலவே கேரட் , உருளைக்கிழங்கு , உள்ளிட்ட காய்கறிகள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

Categories

Tech |