விருதுநகர் மாவட்டதில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சாத்தூர் டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாத்தூர் வடக்கு ரத வீதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து கேரணம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் மது விற்பனை செய்த அனுப்பன்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரையும், மதுரை பேருந்து நிலையத்தில் மது விற்பனை செய்த வைரமுத்து என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அம்மாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மது விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் ராமலிங்காபுரத்தை சேர்ந்த வீரவாரெட்டி என்பது தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்தவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.