Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும்… கள்ளச்சாராய விற்பனை… சாராய ஊறலை அழித்து போலீசார் அதிரடி…!!

நெல்லையில் சொந்த தோட்டத்தில் வைத்து சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக சிவந்திபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சிவந்திப்பட்டியில் இருந்து பருத்திப்பாடு செல்லும் சாலையில் ராஜா என்பவரது தோட்டத்தில் வைத்து 3 பேர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சிவந்திபட்டியை சேர்ந்த ராஜா(58), கட்டை பரமசிவம்(37), பரமசிவம்(42) என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த 3 பேரை கைது செய்த போலீசார் அங்கிருந்த சாராய ஊறலையும் அளித்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 4 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

 

Categories

Tech |