Categories
உலக செய்திகள்

தொடரும் கனமழை…. பயணங்களை தவிர்க்கவும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

நேபாளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை ஏற்றம் நடைப்பயிற்சி செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேபாளத்தில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. இது தொடர்பாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மலை ஏற்றம் மற்றும் சாகச பயணங்களை மேற்கொள்பவர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Image result for நேபாளம் மலையில் கனமழை

ஆனால் மற்ற பகுதிகளைவிட மலைப்பகுதிகளில் மழையின் அளவு அதிகமாவதால் ஏற்கனவே சென்றவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் எவரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏறுவதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 325 பேர் ஏற்கனவே அனுமதி பெற்று உள்ளனர். அவர்களை குறிப்பிட்ட பகுதிகளில் இறக்கிவிட சென்ற ஹெலிகாப்டர் மழை காரணமாக வேறு வேறு இடங்களில் அவசரமாக தரை இறக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |