பைசர் தடுப்பூசிகளை இந்தியாவிற்கு வினியோகிக்க செய்யப்பட்ட ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம், தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் வர்த்தக கூட்டமைப்பு, வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஆல்பர்ட் பவுர்லாஸ் கூறுகையில், 300 கோடி தடுப்பூசிகள் இந்த வருடமும், அடுத்த வருடத்தில் 400 கோடி தடுப்பூசிகளும் தயாரிக்கவுள்ளோம்.
சுமார் 200 கோடி தடுப்பூசிகளை இந்தியா போன்ற நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தியா, எங்கள் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கினால் தான் அனுப்ப முடியும்.
தற்போது அனுமதியளிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசி வினியோகிப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று தெரிவித்துள்ளார்.