Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நாங்க சரி பண்ணி தரோம்” காண்டிராக்டருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட காண்டிராக்டரை தாக்கி 2 பேர் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தலக்கோணம் பகுதியில் கட்டிட காண்டிராக்டரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சுரேஷின் மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்று விட்டது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பழுது நீக்கி தருவதாக கூறி சுரேஷை அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பிறகு 2 பேரும் சுரேஷை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 24 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |