Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக… பெற்றோர் செய்த ஏற்பாடுகள்… சமூக நலக்குழுவினர் அதிரடி

சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை குழந்தைகள் பாதுகாப்புதுறை மற்றும் சமூக நலக்குழு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க சிறுமியின் பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் சம்பந்தப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியின் திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தி பெற்றோரை எச்சரித்துள்ளனர். மேலும் சிறுமியின் விருப்பத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சிறுமியை மீட்டு தேனி குழந்தைகள் இல்லத்தில் தற்காலிகமாக தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Categories

Tech |