Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த… கட்டாயம் இந்த பழங்களை எல்லாம் சாப்பிடுங்க..!!

சர்க்கரை நோயாளிகள் சில குறிப்பிட்ட பழங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. என்ன மாதிரியான பழங்களை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். குளிர்காலத்தில் இயற்கையாகவே சர்க்கரை அளவை கவனமுடன் பார்க்க வேண்டும். இதற்காக நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்க என்ன மாதிரியான பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சு பழம் நீரிழிவு நோய்க்கு மிகவும் உகந்தது. இதில் விட்டமின் சி சத்து உள்ளது. சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி ஆகும். இது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சக்கரை போன்றவற்றிலிருந்து மாறுபாட்டை ஏற்படுத்துகின்றது. சக்கரை அளவை குறைக்கின்றது. எனவே சர்க்கரை நோயாளிகள் உணவில் இதை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

கொய்யா

குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழம். நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழம். இதில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது. குளிர்காலங்களில் கொய்யா பழத்தை எடுத்துக் கொள்வது சர்க்கரை அளவை சீராக வைக்கும். சர்க்கரை நோயாளிகள் குளிர்காலத்தை கொய்யாவை சாப்பிட்டால் நன்மை தரும்.

கிவி

பச்சை நிறம் ஆண்டிபயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பியது. நார்ச்சத்து கொண்டது. சிறந்த ஆக்சிஜனேற்றி. இது வீக்கம் உண்டாகும் பிரிவுகளை நீக்குவது. இதை சாலட் ஆக மற்ற பழங்களுடன் கலந்து சாப்பிடலாம்.

ஆப்பிள்

எல்லா காலங்களிலும் சாப்பிட வேண்டிய ஒரே பழம் ஆப்பிள்.  இதிலுள்ள ஆக்சிஜனேற்றி இரத்த சர்க்கரையை சீராக்குகிறது. உடலில் வளர்சிதை மாற்ற நிலையை மேம்படுத்துகிறது. ஆப்பிளை அப்படியே சாப்பிட வேண்டும். சாறாக்கி குடிக்கக் கூடாது. அதேநேரம் ஆப்பிளை சாப்பிட்ட பிறகு உங்களின் ரத்த அளவை கண்காணிக்க வேண்டும். இது உங்கள் சர்க்கரை அளவை எவ்வளவு குறைத்திருக்கிறது என்பதை அறிய முடியும்.

திராட்சை

திராட்சை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு உயர்ந்து விடும் என்று பலரும் எண்ணி வருகின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது. நீரழிவு நோயாளிகளுக்கு இது நல்ல பலம். ஊதா நிற திராட்சையில் பாலிஃபீனால்கள் டயட்டும் நீரிழிவுக்கு நல்லது. திராட்சையில் உள்ள பைட்டோகெமிக்கல் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும் தன்மை கொண்டது.

பேரிக்காய்

கொஞ்சம் மொறுமொறுப்பான சுவையை இருக்கும் பேரிக்காய் நார்ச்சத்து அதிகம் காணப்படும். இந்த பழத்தை சாறாக்கி சாப்பிடாமல் அப்படியே சாப்பிட்டால் மிகவும் நல்லது. இது  இரவு உணவிற்கு பின்பு எடுத்துக்கொள்ளவேண்டும். இது குறைந்த கிளைசீமிக் குறியீட்டைக் கொண்டு இருக்கும். சிறந்த ஊட்டச்சத்து என்பதால் சர்க்கரை அளவை கையாளுவதில் நன்மை தரக்கூடியது.

Categories

Tech |