அன்றாட வாழ்க்கையில் நாம் அதிக அளவு கோபம் படுகிறோம். ஏனென்றால் வேலைக்கு செல்லும் இடத்தில் வேலை பாளு, மன அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக நம்மை அறியாமலேயே நமக்கு கோபம் வந்துவிடுகிறது. இந்த கோபத்தை கட்டுப்படுத்த நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் கோபத்தை கட்டுப்படுத்த முடியும் .
செய்முறை
அறிவையும், ஒருமுனைப்படுத்துதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோகாசன முத்திரை இது. விரிப்பில் பத்மாசனத்தில் அமர்ந்து காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது. ஆள்காட்டி விரலால் கட்டை விரலை தொட்டு இந்தநிலையில் ஆரம்பத்தில் 20 நிமிடமும் போகப்போக அளவை அதிகரித்துக் கொள்ளலாம். இந்த முத்திரை உங்கள் ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும். அலுவலகத்தில் நேரம் கிடைக்கும் போது இதனை செய்தால் உங்களது கோபம் சற்று தணியும்