ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் ஆண்ட்ரூ டைக்கு பதிலாக அந்த அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியானது நாளை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இத்தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை முழங்காலில் காயமடைந்தார்.இதன் காரணமாக இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றிருந்த அவர் இந்த இரு தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்தும் விலகியுள்ளார்.
தற்போது ஆண்ட்ரூ டைக்கு பதிலாக ஆஸ்திரேலியா அணி தனது சர்ச்சைக்குரிய பந்து வீச்சாளரான சீன் அப்போட்டை அணிக்கு வரவழைத்துள்ளது. இதுவரை இவர் மூன்று டி20, ஒரு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். தற்போது இவரை அணியில் எடுத்திருப்பதினால் எதிரணியினர் சிறிது அச்சத்துடனே இருக்கின்றனர்.ஏற்கனவே சீன் அப்போட் பந்துவீச்சில் சக நாட்டு வீரரான பிலிப் ஹுக்ஸ் மரணமடைந்த சம்பவம் சர்வதேச கிரிக்கெட்டையை உலுக்கியது. தற்போது அவர் சர்வதேச போட்டிகளிலேயே களமிறங்கவுள்ளதால் எதிரணியினர் சிறிது தடுமாற்றத்துடனே இருக்கின்றனர்.