டாக்டர் திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ள காட்சியை நீக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் பாராட்டை பெற்று வரும் இந்த படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில், ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருப்பதாக மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, இந்த படத்தில் விளையாட்டில் தோல்வி அடைந்த ஒரு ஆணுக்கு நைட்டி அணிவித்து தலையில் பூ வைத்து இனிமேல் உன் பெயர் கோமதி என கூறி கேலி செய்வது போல காட்சி இடம் பெற்றுள்ளதால், இதை பார்த்த மகளிர் அமைப்பினர் ‘பெண்களின் ஆடை அணிவதால் அசிங்கமா’ என்றும் படத்தில் இந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும் இந்த படத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.