Categories
அரசியல்

தாழ்த்தப்பட்டோர் குறித்த சர்ச்சை பேச்சு… ஆர்.எஸ்.பாரதியை காவலில் எடுப்பது தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு!

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார்.

இதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள வீட்டில் இன்று அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்யப்பட்டார்.

அப்போது பேசிய அவர், உபகரணங்கள் வாங்கியதில் துணை முதல்வர் ஓபிஎஸ் செய்த ஊழலை புகாரளித்தேன். அதனால் யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை மறைத்து வைத்துவிட்டால் கல்யாணம் நிற்காது, கொரோனா விவகார ஊழல் பற்றி புகாரளிக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஆர்.எஸ். பாரதியை கைது செய்து காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. அதில், ஆர்.எஸ்.பாரதியை நீதிமன்ற காவலில் வைப்பது தொடர்பான விசாரணை முடிந்து உத்தரவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |