Categories
மாநில செய்திகள்

“சர்ச்சை வார்த்தைகள்”….. இதில் கோர்ட்டின் தீர்ப்பு வேற…. திருட்டு வழக்கில் வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி…. பதவிக்கு வந்த ஆபத்து….!!!!!

தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி அவ்வப்போது பொது இடங்களில் சர்ச்சை வார்த்தைகளை பேசி கட்சி தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். இவர் பெண்கள் இலவச பேருந்து பயணத்தை பார்த்து ஓசி பயணம் என்று கூறினார். இதனால் பெண்கள் பலரும் ஆவேசம் அடைந்ததோடு இலவச பேருந்து பயணத்தை புறக்கணித்தும் வந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் பொன்முடி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அதன்பின் விழுப்புரம் மாவட்டத்தில் தன்னுடைய சொந்த தொகுதி மக்களையே ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இதனால் அமைச்சர் பொன்முடி மீது மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தியான நிலையே இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2006-11 ஆம் ஆண்டுகாலகட்டத்தில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் கடத்தியதாக கூறி அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கௌதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த மணல் கடத்தலின் காரணமாக அரசாங்கத்திற்கு 28 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக காவல்துறையினர் 3 பேரின் மீதும் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்திருந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் பொன்முடி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள அறிக்கைகள் மற்றும் சாட்சிகள் அனைத்தும் வழக்கை தடை இன்றி நடத்துவதற்கு போதுமானதாக இருக்கிறது என நீதிபதிகள் கூறினர். இதனால் வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சர்ச்சை வார்த்தைகளை பொது வெளியில் பேசி சிக்கிக் கொள்ளும் அமைச்சருக்கு தற்போது கோர்ட்டின் தீர்ப்பு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |