Categories
தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் கமல் வீட்டில் தனிமைப்படுத்தியதாக நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை… நோட்டீஸ் அகற்றம்!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 898ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 39 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தனிப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தேடி கண்டறிந்து அவர்களது வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டியும் மாநகராட்சி அந்த வீட்டில் உள்ள நபர்களை தனிமையில் இருக்குமாறு கூறி வந்தது.

அந்த வகையில் கொரோனா அச்சம் காரணமாக நடிகர் கமலஹாசன் தனிமையில் இருக்க வேண்டுமென வர் வீட்டின் முன் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டி அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 6ம் தேதி வரை அவரை தனிமையில் இருக்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியது. இதனையடுத்து மய்யத்தை ஓரம் கட்ட முயற்சி என கட்சியினர் குற்றம் சாட்டினர்.

தகவல் தெரிவிக்காமல் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். இந்த சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டவர் வீடு என்ற நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். மேலும் கமல் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்று வந்ததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட் முகவரியை கொண்டு கமல்ஹாசனின் பழைய முகவரியில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் கொரோனா நோட்டீஸ் அகற்றப்பட்டது என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளனர்.

Categories

Tech |