Categories
உலக செய்திகள்

மகாராணியாரிடம் ஆலோசிக்கப்பட்டதா..? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பெயர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானிய இளவரசர் ஹரி தனக்கு பிறந்துள்ள இரண்டாவது பெண் குழந்தைக்கு மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் செல்ல பெயரை சூட்டியிருப்பது குறித்து பெரும் சர்ச்சை எழும்பியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு கடந்த 4-ஆம் தேதி இரண்டாவதாக பிறந்துள்ள பெண் குழந்தைக்கு லிலிபெட் டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர் என இளவரசர் ஹரி பெயர் சூட்டியுள்ளார். அதில் அவர் தனது தாயை கவுரவப்படுத்தும் விதமாக டயானா என்றும், லிலிபெட் என்பது தனது பாட்டியை கௌரவிக்கும் வகையிலும் வைத்துள்ளார். ஆனால் லிலிபெட் என்பது மறைந்த பிரித்தானிய இளவரசவரும் ஹரியின் தாத்தாவுமான பிலிப், மகாராணி இரண்டாம் எலிசபெத்-க்கு சூட்டிய செல்லப் பெயர் என்பதால் பாட்டியாரிடம் ஆலோசிக்காமல் அவருடைய செல்ல பெயரை தனது மகளுக்கு ஹரி வைத்திருப்பது பாட்டிக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால் ஹரி-மேகன் தம்பதிக்கு நெருக்கமானவர்கள் சிலர் ஹரி தனது மகளுக்கு சூட்டிய பெயரானது அவருடைய பாட்டியாரிடம் கலந்து ஆலோசித்த பின்னரே வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அரண்மனை வட்டாரத்தை சேர்ந்த மூத்த அலுவலர் ஒருவர் இளவரசர் ஹரியின் இரண்டாவது குழந்தைக்கு சூட்டப்பட்டுள்ள பெயரானது மகாராணியிடம் ஆலோசிக்காமல் வைக்கப்பட்டுள்ளது என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதனால் மிகப்பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் ஹரி-மேகன் தம்பதிக்கு நெருக்கமான தோழி ஓமிட ஸ்கோபிஎ என்பவர் அரண்மனை வட்டாரத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் பிரபல தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியை சுட்டிக்காட்டி, இளவரசர் ஹரி தனக்கு மகள் பிறந்த செய்தியை முதன் முதலில் தனது பாட்டியாரான பிரித்தானிய மகாராணியாரிடமே தெரிவித்ததாக கூறியுள்ளார்.

மேலும் ஹரி-மேகன் தம்பதிக்கு நெருக்கமான பலரும் இளவரசர் ஹரி தனது மகளுக்கு வைத்துள்ள லிலிபெட் என்ற பெயரை மகாராணியார் விரும்பவில்லை என்றால் அந்த பெயரை இளவரசரும் தனது மகளுக்கு வைத்திருக்க மாட்டார் என்று கூறியுள்ளனர். இதனால் மிக பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் மகாராணியார் இது குறித்து மனம் விட்டு பேசினால் மட்டுமே இந்த விமர்சனங்கள் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |