பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரிச்சிதா சதா. சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது தொடர்பாக இந்திய ராணுவ வீரர் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதற்கு நடிகர் ரச்சிதா கல்வான் ஹாய் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தன்னுடைய பதிவுக்கு வருத்தம் தெரிவித்து ரிச்சிதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையில் நடிகர் அக்ஷய் குமார் ரிச்சிதாவின் பதிவை வெளியிட்டு இந்த பதிவு மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும், நம்முடைய ஆயுத படை வீரர்கள் இருப்பதால்தான் நாம் இங்கு இருக்கிறோம். அவர்களுக்கு நன்றியின்றி இருக்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், அக்ஷய்குமார் மற்றும் ரிச்சிதாவின் பதிவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு உங்களிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை அக்ஷய்குமார். நீங்கள் சொன்னதை விட ரிச்சிதா சொன்னது நம் நாட்டுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுகளால் தற்போது சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
Didn’t expect this from you @akshaykumar ..having said that @RichaChadha is more relevant to our country than you sir. #justasking https://t.co/jAo5Sg6rQF
— Prakash Raj (@prakashraaj) November 25, 2022