Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு வசமான அப்பு…. இந்தியாவுடன் பிளான்…. கைகோர்த்த அமெரிக்கா….!!

குவாட் கூட்டணி நாடுகளின் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சீனாவின் செல்வாக்கை குறைக்க ஆலோசித்தனர்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் குவாட் என்ற அமைப்பை 2017ஆம் ஆண்டு உருவாக்கியது. இந்திய பசிபிக் பெருங்கடலில் மற்ற நாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், குவாட் அமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.

குவாட் அமைப்பு நாடுகளின் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை சந்தித்து பேசினார்.

இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து ஜெய்சங்கர் கூறுகையில்” டோக்கியோ பயணத்தை பாம்பியோவுடனான சந்திப்புடன் தொடங்குகிறேன். பல துறைகளில் இரு நாட்டு கூட்டணியை உறுதிப்படுத்த விரும்புகிறேன். இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஸ்திரத்தன்மை வளம் ஆகியவற்றை உறுதிப்படுத்த தொடர் முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார்.

Categories

Tech |