Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பே இல்ல..! லண்டனை உலுக்கிய வழக்கு… நீதிமன்றத்தில் கண்கலங்கிய குடும்பத்தினர்..!!

லண்டனில் 33 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனை சேர்ந்த Sarah Everard (33) எனும் இளம்பெண் Clapham பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். இந்த நிலையில் காவல்துறை அதிகாரியாக போலி வேடமிட்டிருந்த Wayne Couzens (48) என்னும் நபர் Sarah-வை இடைமறித்து பேசியுள்ளார். அப்போது sarah தான் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் என்று அந்த நபரிடம் கூறியுள்ளார். இதையடுத்து Wayne Couzens அந்தப் பெண்ணை போலியாக கைது செய்து சுமார் 80 மைல் தூரம் காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து அவரை கொன்று உடலை எரித்து சாம்பலாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிசிடிவி-யில் தெற்கு லண்டனில் உள்ள Poynders court சாலை ஓரத்தில் Sarah நிற்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் குற்றவாளியிடம் sarah-வின் தந்தை “நீங்கள் செய்த குற்றத்தை ஒருபோதும் மன்னிக்க இயலாது” என்று கூறியுள்ளார். மேலும் உங்களுடைய இந்த கொடூர செயலால் Sarah-வின் சகோதரன், சகோதரி, தந்தை, தாய், நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரது இதயமும் உடைந்துவிட்டது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து Sarah-வின் சகோதரி “அவளுடைய கனவுகள் மற்றும் நம்பிக்கை என அனைத்தையும் தாங்கள் அழித்து விட்டீர்கள், எவ்வளவோ காலம் என் சகோதரியுடன் இனிமையாக வாழ்ந்திருப்பேன் அனைத்தும் அழிந்து விட்டது” என்று கண்கலங்கி பேசியுள்ளார். இதற்கிடையே Sarah-வின் தாயார் “தங்கள் குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தோம், ஆனால் தற்போது 4 பேர் மட்டுமே உள்ளோம்.

இந்த சம்பவம் தங்களுக்கு பெரும் கொந்தளிப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் பிரித்தானியாவில் உள்ள பெண்களுக்கும் Sarah-வின் இந்த மரணம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத உணர்வையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதேசமயம் நாளை இந்த கொலை சம்பவத்திற்கான தண்டனையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |