செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, சசிகலா அவர்கள் இந்த இயக்கத்தில் உறுப்பினராகவோ அல்லது ஏதேனும் ஒரு பொறுப்பில் தொடர்ந்து பயணிப்பதில் தவறு இல்லை. ஆனால் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளி, அண்ணா திமுக கட்சிக்கு தலைமையை ஏற்று நடத்துவதை எந்த அண்ணா திமுக தொண்டர்களும் விரும்பவில்லை. தமிழ்நாட்டு மக்களும் விரும்ப மாட்டார்கள், வாக்களிக்க மாட்டார்கள். மற்றபடி அவரை இணைத்துக்கொண்டு பயணிக்கலாம்.
அண்ணா திமுக என்பது ஒரு ஈபிஎஸ் , ஒரு ஓபிஎஸ் அல்ல. இந்த இரண்டு பேரும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். பொதுச்செயலாளர்களுக்கு தேர்தல் நடத்துவோம். நானும் போட்டி இடுகின்றேன் , அவர்களும் நிக்கட்டும். அண்ணா திமுக தொண்டர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரை தலைவராக ஏற்றுக் கொண்டு அவர் தலைமையில் செயல்படலாம், தொண்டர்கள் பலம் இருக்கிறது. தொண்டர்களும் நிச்சயமாக அதை தான் விரும்புகிறார்கள்.
பொதுக்குழு மூலமாக எடுக்கின்ற முடிவுகளும், நீதிமன்றத்தின் மூலமாக திணிக்கப்படுகின்ற முடிவுகளையும் மக்களும், தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசியல் கட்சியினுடைய நோக்கம் என்ன ? தேர்தலில் வெற்றி பெறுவது. அந்த வெற்றியை பொதுக்குழு உறுப்பினர்கள் தேடி தர முடியாது, நீதிமன்றங்கள் தேடித் தர முடியாது, களத்தில் நின்று போராடுகின்ற கிளைச் செயலாளர்களும், அடிப்படை உறுப்பினர்களும்தான் பெற்று தர முடியும். அப்போ அந்த வெற்றியை பெற்று தருகின்ற தொண்டர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.