Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க இல்லாம குக் வித் கோமாளியா…? ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய கோமாளிகள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த இந் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்ற புகழ் மற்றும் சிவாங்கி வரப்போகும் எபிசோடுகள் அனைத்திலும் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரியவந்துள்ளது.

ஏனென்றால் அவர்கள் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருப்பதால் குக் கோமாளி நிகழ்ச்சியின் ஓரிரு எபிசோடுகளில் மட்டுமே வருவார்கள் என்று கூறப்படுகிறது. இத்தகவல் புகழ் மற்றும் சிவாங்கி ரசிகர்களுக்கு ஒரு சிறிய கவலையாக இருப்பினும் அவர்களை பெரிய திரையில் காண பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |