Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழ் சீரியல் நடிகையுடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழ்…. வைரலாகும் வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் ஜீ தமிழ் சீரியல் நடிகையுடன் நடனமாடியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்றவர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர்.

அந்த வகையில் தனது திறமையான நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி தற்போது பல படங்களில் நடித்து வருபவர் புகழ். சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் புகழ் அவ்வபோது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் அதில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான ‘நீதானே என் பொன்வசந்தம்’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் அணு என்கின்ற தர்ஷாவுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார் வீடியோ காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவிற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/COUvxQfB2FZ/

Categories

Tech |