Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் குக் வித் கோமாளி பிரபலம்…. வெளியான சூப்பர் தகவல்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ஹிட்டடித்து வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார்.

இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதே போல் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்துமுடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் சில பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  5 வது சீசனில் பங்கேற்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக கலந்து கொள்வார் என்று தகவல் தெரியவந்துள்ளது.

ஆனால் அஸ்வின் தற்போது சில படங்களில் கமிட்டாகி இருப்பதால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ஒரு சந்தேகத்தின் பேரில் தான் இருக்கிறது. ஆகையால் பிக் பாஸ் 5யில் யார் யார் போட்டியாளராக பங்கேற்க இருக்கிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |