குக் வித் கோமாளி புகழ் படப்பிடிப்பு தளத்தில் கீழே விழுந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுகுறித்து ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் ஒவ்வொரு நபரின் செயலும் காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. குறிப்பாக இந்நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் புகழின் காமெடிக்கு அளவே இல்லை என்று கூறலாம்.
இந்நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த புகழ் தற்போது படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ஒரு படப்பிடிப்பின் போது அவர் சோபாவின் மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://www.instagram.com/p/CMv6fD3hO-G/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again