விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு சென்ற தீபாவின் சாமியார் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகை தீபா போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் அவர் தற்போது மற்றொரு பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியல் நடித்து வருகிறார். ஆனால் விஜய் டிவியில் பார்த்ததற்கும் யாரடி நீ மோகினி சீரியல் பார்ப்பதற்கும் தீபா அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி உள்ளார். ஏனென்றால் இந்த சீரியல் அவர் சாமியார் வேடம் அணிந்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.