Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபு இடத்தை பிடிக்கும் குக் வித் கோமாளி புகழ்…. அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு…!!

குக் வித் கோமாளி புகழுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ள அனைவரும் காண்போரை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றனர். அதிலும் குறிப்பாக புகழின் காமெடிக்கு அளவே இல்லை.

புகழ் ஆரம்ப காலகட்டத்தில் காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று வந்தார். தற்போது அவர் குக் வித் கோமாளி மேடையை சரியாக பயன்படுத்தி பெரிய திரையிலும் மாஸ் காட்டி வருகிறார். அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

அந்த வரிசையில் அஜித்தின் வலிமை, விஜய்யின் தளபதி 65, சிவகார்த்திகேயனின் டான், அருண் விஜய்யின் AV33 விஜய் சேதுபதியின் VJS 46 உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் புகழ் தொடர்ச்சியாக அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க இருப்பதால் பிரபல காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபுவின் இடத்தை புகழ் தட்டி செல்வார் என்று திரைத் துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Categories

Tech |