குக் வித் கோமாளி இரண்டாவது சீசனின் அறிமுக நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் வெற்றிகரமாக இரண்டு சீசன்களை கடந்து முடிந்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் குக் வித் கோமாளி ரசிகர்களுக்காக கடந்த வாரம் இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனின் இறுதிச்சுற்று மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. இதே போல் வரும் வாரம் குக் வித் கோமாளி இரண்டாவது சீசனின் அறிமுக நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல் குக் வித் கோமாளி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.