தமிழ் கலாச்சாரத்தில் தாலி கட்டிக்கொள்வது என்பது இல்லை என்று குக் வித் கோமாளி கனி ஓபனாக பேசியுள்ளார்.
குக் வித் கோமாளியில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற கனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் லைவ் வீடியோ ஒன்றில் வந்த கனி தாலியை நிறைய பேர் ஏன் அணிந்து கொள்ளவில்லை என்பது குறித்து பலரும் கேள்வி கேட்கிறார்கள். தமிழ் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு விஷயம் தாலி கட்டிக்கொள்வது அது சமீபத்தில்தான் புகுத்தப்பட்டது என்று தான் நம்புவதாக கூறியுள்ளார்.
https://www.instagram.com/tv/CSCHMdzlS3W/?utm_medium=share_sheet
மேலும் நம் மனதிற்கு பிடித்தவர்களை பெரியவர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக் இவர் என் துணை, இவர் என் இணை என சொல்லி அவருடன் வாழ்க்கையை தொடங்குவதுதான் தமிழ் மரபு என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது திருமணம் தாலி கட்டி தான் நடந்ததாகவும், திருமணம் நடந்ததற்கான அடையாளமாக தாலி இருந்ததாகவும், அதை மூன்றாவது மாதம் தான் மாற்றினார்கள் அதுவரை நான் மஞ்சள் தாலியை தான் அணிந்து கொண்டிருந்தேன்.
புருஷனுக்கான ஒரே விஷயம் தானே தாலி கட்டுவது ? தாலியை என் கணவருக்கான ஒரு விஷயமாக நினைத்திருந்தேன். ஆனால் அந்த தாலியில் மூன்று முடிச்சியை யாரோ ஒருவர் போட்டது என்பதால் அதன் மீது பெரிதளவில் ஈடுபாடு எதுவும் இல்லாமல் போய்விட்டது என்று பேசியுள்ளார்.