Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வராதது ஏன்?… பவித்ரா வெளியிட்ட வீடியோ…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு வாரம் கலந்து கொள்ளாதது குறித்து பவித்ர லட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம் . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பாபா பாஸ்கர் மாஸ்டர், கனி ,பவித்ர லட்சுமி ,அஸ்வின், சகிலா உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார். மேலும் புகழ், சிவாங்கி, பாலா ,மணிமேகலை உள்ளிட்ட பலர் கோமாளிகளாக வருகின்றனர். கடந்த வாரம் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் சீசன் 1 போட்டியாளர்களான வனிதா, ரம்யா ,உமா ரியாஸ், ரேகா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மிக கலகலப்பாக இருந்த அந்த நிகழ்ச்சியில் சீசன் 2 போட்டியாளரான பவித்ரா மட்டும் பங்கேற்கவில்லை .  இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சிக்கான புரோமோவிலும் பவித்ரா இல்லதாதல் ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

இதையடுத்து ரசிகர்கள் சிலர் பவித்ரா வராதது ஏன் ? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்துள்ளனர் . இந்நிலையில் இதுகுறித்து பவித்ரா வெளியிட்டுள்ள வீடியோவில் ‘சில தனிப்பட்ட காரணங்களுக்காக என்னால் இந்த நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்த வாரம் கண்டிப்பாக கலந்து கொள்வேன். நீங்கள் என் மேல் காட்டும் அன்பிற்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.

Categories

Tech |